முற்றுகையின் முதல் நாளில் ஈரானிய துறைமுகங்களுக்கு அருகில் நடமாடின சில கப்பல்கள்
அமெரிக்கா அறிவித்த முற்றுகையின் முதல் முழு நாளில், பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் வளைகுடாவில் உள்ள ஈரானிய துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் குறைந்த அளவிலேயே கப்பல் போக்குவரத்து நடைபெறுவதாக கப்பல் கண்காணிப்புத் தரவுகள் தெரிவித்துள்ளன.
ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில எரிபொருள் கப்பல்கள் மற்றும் மொத்த சரக்குக் கப்பல்கள் மட்டுமே அந்த நீர்வழியைக் கடந்து சென்றதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து நடவடிக்கை
இதன்படி "போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், அவை கட்டுப்படுத்தப்பட்டதாகவும் சீரற்றதாகவும் உள்ளன," என்றும் கூறப்பட்டுள்ளது.

மரைன்ட்ராஃபிக் தரவுகளின்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலையில், சீனாவிற்குச் சொந்தமான 'ரிச் ஸ்டொரி' என்ற ஒரு எண்ணெய் கப்பல் ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ரிச் ஸ்டாரி கப்பலானது, ஷாங்காய் சுவான்ரன் ஷிப்பிங் கோ லிமிடெட் நிறுவனத்துடன் தொடர்புடைய ஃபுல் ஸ்டார் ஷிப்பிங் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமானது.
மேலும், அதன் ஈரான் தொடர்புகள் காரணமாக 2023 முதல் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி அமெரிக்கக் கடற்படை முற்றுகை எவ்வாறு நடைமுறைப்படுத்தும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
வெளிச்செல்லும் போக்குவரத்திற்கான நடைமுறை எளிமையாக இருக்கும் என்றும், ஆனால் உள்வரும் கப்பல்களுக்கும், ஏமாற்றும் நிபந்தனைகளின் கீழ் இயங்குபவர்களுக்கும் இது மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, கப்பல் கண்காணிப்புத் தரவுகள் கூறியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |