சோனி வேர்ல்ட் புகைப்பட விருது இறுதிப் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை மாணவர்
சோனி வேர்ல்ட் புகைப்பட விருதுகளில் முதல் முறையாக இலங்கையர் (Youth) ஒருவரின் சாதனை, இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இலங்கையின் படைப்பாற்றல் துறைக்கு ஒரு வரலாற்றுத் தருணத்தை 16 வயதான ஜெய்ரின் அன்ரன் (Jeirin Anton) தனதாக்கிக் கொண்டுள்ளார்.
உலகின் மிகவும் மதிப்புமிக்க ஒளிப்படப் போட்டியான 'சோனி வேர்ல்ட் போட்டோகிராபி விருதுகள் 2026 (Sony World Photography Awards 2026) இன் இளைஞர் பிரிவில் உலகளாவிய இறுதிப் பட்டியலில் முதல் பத்தில் (Top 10) அவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
இருநூறுக்கு அதிகமான நாடுகள்
இருநூறுக்கு அதிகமான நாடுகளிலிருந்து பெறப்பட்ட 430,000 க்கும் அதிகமான ஒளிப்படங்களில் இருந்து, முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இலங்கையர் என்ற பெருமையை ஜெய்ரின் இதன் மூலம் பெற்றுள்ளார்.

அவரது "Keep it Clean!" என்ற ஒளிப்படம், லண்டனின் Ruby Rees-Sheridan,Assistant Curator, Photography, National Portrait Gallery (UK) நிபுணர்கள் உள்ளிட்ட சர்வதேச நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு புனித பீட்டர்ஸ் கல்லூரியின் மாணவரான ஜெய்ரின், தனது பாடசாலையின் மற்றும் இலங்கைத் தமிழரின் புகழை உலகளாவிய கலைத் தளத்திற்கு கொண்டு சேர்த்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இவரது படைப்புகள் 2026 ஏப்ரல் 17 முதல் மே 4 வரை லண்டனில் உள்ள சோமர்செட் ஹவுஸில் (Somerset House in London) காட்சிப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |