யாழ்ப்பாணத்தை உலகறியச் செய்ய வேண்டும்.... பிரான்சிலிருந்து சைக்கிளில் யாழ் வந்த சூரான்!
யாழ்ப்பாணம் எங்கே இருக்கின்றது என்பதை உலகத்திற்கே காட்டுவதற்காகவே இந்த சைக்கிள் பயணத்தை முன்னெடுத்ததாக பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சைக்கிளில் வந்த சூரான் தெரிவித்துள்ளார்.
எனது பெயர் சூரான் ஆனால் நான் Paris to Jaffna என்ற அடையாளத்துடனே சைக்கிள் பயணத்தை ஆரம்பித்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஐபிசி தமிழின் உலகாளும் தமிழர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் பாரிஸில் இருந்து கடந்த செப்டம்பர் 01, 2025 அன்று பயணத்தை ஆரம்பித்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற 13 நாடுகளை கடந்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்தேன்.
ஆப்கானிஸ்தான் வரை சைக்கிளில் பயணித்துவிட்டு ஆப்கானிஸ்தானில் இருந்து விமானம் மூலம் இந்தியாவை வந்தடைந்து பின்னர் நாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணத்திற்கு வந்தேன். நான் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது மிகப்பெரிய வரவேற்களிக்கப்பட்டது.” என தெரிவித்தார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க........
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்