இலங்கையுடனான முதல் டெஸ்ட் : 120 வருடங்களுக்கு பின்னர் தென்னாபிரிக்க வீரர் படைத்த சாதனை
இலங்கை அணியுடனான (sri lanka cricket)இன்றைய(28) முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க வீரர் மார்கோ ஜான்சன்(Marco Jansen) 120 வருடங்களுக்கு பின்னர் சாதனை படைத்துள்ளார்.
இவர் இன்றையதினம் 13 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 07 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தியிருந்தார். 6.5 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை வீழ்த்திய நிலையிலேயே இவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
120 வருடங்களுக்கு பின்னர் சாதனை
1904 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஹக் ட்ரம்பிள் 07 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை வீழ்த்தியதே இதுநாள்வரை சாதனையாக இருந்தது.
மோசமான சாதனை படைத்த இலங்கை அணி
இதேவேளை இன்றைய டெஸ்ட்போட்டியில் 42 ஓட்டங்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழந்தமையானது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இனிங்ஸ் ஒன்றில் இலங்கை அணி பெற்ற குறைந்த ஓட்ட எண்ணிக்கை என்ற மோசமான சாதனையாக அமைந்துள்ளது.
டெஸ்ட் இனிங்ஸ் ஒன்றில் இலங்கை அணி பெற்ற மிகக் குறைந்த ஓட்டங்கள் 1994ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கண்டியில் நடைபெற்ற போட்டியில்பெற்றுக்கொண்ட 71 ஓட்டங்களாக இதுநாள்வரை அமைந்திருந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |