யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள நடிகை ரம்பா! மருதடியில் வழிபாடு (படங்கள்)
தென்னிந்திய தமிழ் நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.
நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார்.
இவரின் முயற்சியாக யாழ்ப்பாணத்தில் நொதேர்ன் யுனி (Nothern uni) தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலவச இசை நிகழ்ச்சி
புதிதாக உருவாக்கப்பட்ட நொதேர்ன் யுனியில் சமய சம்பிரதாயபூர்வமாக பால் காய்ச்சி இன்றைய தினம் சாமி படம் வைக்கப்படவுள்ளது.
நொதேர்ன் யுனியின் அனுசரனையில் டிசம்பர் 21ம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் பங்கேற்கவுள்ள பிரம்மாண்டமான இலவச இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
அதேவேளை, இசைநிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணம் வந்த அவர்கள் கிளிநொச்சி - இயக்கச்சியிலுள்ள சுற்றுலாத்தளமான றீ(ச்)ஷாவில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |