சீனாவிற்கு பேரிடி - P-8 Poseidon விமானத்தை இறக்கிய முக்கிய நாடு
இந்தியாவைப் (India) போல தென் கொரியாவும், (South Korea) P-8 Poseidon எனும் கடலோர கண்காணிப்பு விமானத்தை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் கொரியா வாங்கியுள்ள இந்த P-8 Poseidon விமானம் சீனாவின் கடற்படை மற்றும் வட கொரியாவின் நீர்மூழ்கிக் கப்பல்களை கண்காணிக்க முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
P-8A Poseidon என்பது 'Submarine Killer' என அழைக்கப்படும் ஒரு உயர் திறன் வாய்ந்த கடற்படை விமானமாகும்.
P-8A Poseidon விமானம்
இது 907 கிமீ/மணிக்கு வேகத்தில் பறக்கக்கூடியது மற்றும் துரித விமானம், நீண்ட ரேஞ்ச், மிகச் சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் செயல்படக்கூடியது.
மேலும், பழமையான P-3 விமானங்களை மாற்றவும், வட கொரியாவிலிருந்து வரும் கடல்சார் அச்சுறுத்தல்களுக்கு எதிராக கண்காணிப்பு மற்றும் தாக்குதல் திறனை மேம்படுத்தவும், தென் கொரியா P-8A Poseidon-ஐ வாங்கியுள்ளது.
தற்போது இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா என இந்தோ-பசிபிக் மண்டலத்தில் நான்கு நாடுகள் இந்த P-8 Poseidon விமானத்தை இயக்கி வருகின்றன.
907 கிமீ வேகம், 120 sonobuoy வீசும் திறன், நீர்மூழ்கிக் கப்பல்களை கண்காணித்து அழிக்கும் திறன் , எதிரி கப்பல்களுக்கு நேரடி தாக்குதல் நடாத்துதல் போன்ற திறன்களை இந்த விமானம் கொண்டுள்ளது.
மேலும், P-8 Poseidon விமானத்தின் மூலம், கடற்படை நகர்வுகள் மிக நெருக்கமாக கண்காணிக்கப்படலாம் என்பதால், சீனாவும் வடகொரியாவும் அதிர்ச்சியில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
