தென் கொரியாவில் கோர விபத்துக்குள்ளான விமானம் - 151 பேர் பலி - அதிர்ச்சி காணொளி
புதிய இணைப்பு
தென் கொரியாவின் (South Korea) முவான் விமான நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
181 பேர் பயணித்த விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது விமானம் விபத்துக்குள்ளானது.
லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்கத்தின் போது விமானம் விபத்துக்குள்ளானது.
மூன்றாம் இணைப்பு
தென்கொரியாவில் 181 பேர் பயணித்த விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 120 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
⚡️DRAMATIC moment South Korean plane with reported 180+ passengers becomes a fireball and crashes at airport CAUGHT on cam pic.twitter.com/VdrdavEXgT
— RT (@RT_com) December 29, 2024
இந்த விபத்தில், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் எனவும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் ஒரு தீயணைப்பு துறை அதிகாரி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிர் பிழைத்த இருவரும் விமானக் குழுவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகித் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் 62 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. தாய்லாந்திலிருந்து திரும்பிய ஜெஜு ஏர் நிறுவனத்தின் விமானம், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
175 பயணிகள், 6 விமானப் பணியாளர்களுடன் சென்ற விமானமே விபத்துக்குள்ளானது.
முதலாம் இணைப்பு
தென் கொரியாவில் (South Korea) உள்ள விமான நிலையத்தில் 181 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Yonhap News Agency is reporting a Jeju Air 737 went off the runway after landing in Muan. This appears to be #7C2216 from Bangkok operated by a 737-800. https://t.co/Nyf9IuyxmA https://t.co/QkNX4B8eNF pic.twitter.com/LCIUktDbHN
— Flightradar24 (@flightradar24) December 29, 2024
நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கபடுகிறது.
175 பயணிகள் மற்றும் 6 விமானப் பணிப்பெண்களை ஏற்றிச் சென்ற ஜெஜு ஏர் விமானம் தாய்லாந்தில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்ததாகவும், தரையிறங்கும் போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |