6 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் நங்கூரமிடப்பட்ட தென்கொரிய போர்க் கப்பல்
தென்கொரிய கடற்படைக்கு சொந்தமான 'குவாங்கெட்டோ தி கிரேட்' என்ற போர்க்கப்பல் இன்று (26) காலை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் நங்கூரமிடப்படும் போது இலங்கைக்கான கொரிய தூதுவர் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
அதேவேளை, தென் கொரிய போர்க்கப்பல் ஒன்று 6 வருடங்களுக்கு முன்பு கடைசியாக 2017 ஒக்டொபரில் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நோக்கம்
இந்நிலையில், தி இந்தோ-பசிபிக் மூலோபாயத்தின் கீழ் தெற்காசிய பங்குதாரர்களுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்வதாக தென் கொரிய கடற்படை தெரிவித்துள்ளது.
அத்தோடு, இந்த கப்பல் கொரிய கடற்படையின் கடற்கொள்ளை எதிர்ப்பு பிரிவுக்கு சொந்தமானது, இது கூட்டு பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரிய மற்றும் பிற கப்பல்களின் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Sri Lanka Parliament Election 2024 Live Updates
