ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்! மீட்கப்பட்ட இலங்கையர்கள்
தெற்கு யேமனில் சரக்குக் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில், குறித்த கப்பலில் இருந்த 21 பேர் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த தரப்பினரில் இரண்டு இலங்கையர்களும் உள்ளடங்குவதாகவும் அவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த தாக்குதலில், மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீட்பு நடவடிக்கை
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில், பாதிக்கப்பட்டவர்களை இந்திய கடற்படையினர் மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
India saved the survivors of the bulk carrier M/V True Confidence after yesterday’s Houthi missile attack that killed 3.
— Visegrád 24 (@visegrad24) March 7, 2024
This video shows the crew of the military vessel INS Kolkata saving survivors
India plays a big role in the Red Sea crisis
???? pic.twitter.com/nKmGiWSFkq
எனினும், காயமடைந்த இலங்கையர் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த கப்பலில் வேறு இலங்கையர்கள் இருந்தார்களா என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |