ஆட்சி மாற்றத்திற்கு தயாராகும் தென்னிலங்கை - தமிழர்களுக்கு முக்கிய செய்தி
தென்னிலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கான காற்று வீசத் தொடங்கியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்தார்.
எனவே சிறிலங்கா அரசாங்கத்திற்கு வாக்களித்த சிங்களப் பேரினவாத மக்கள் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் வரை தமிழ் மக்கள் பொறுமைகாக்க வேண்டும் என யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் வலிறுத்தினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
''பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தை சிங்கள மக்களே "உங்களது ஆட்சி போதும் வீட்டுக்குச் செல்லுங்கள்" என்று கூறும் நிலை தற்போது உருவாகியுள்ளது.
எனவே சிங்கள மக்களே இன்றைய ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முயற்சிக்கும் போது எதிரணியினராகிய நாமும் தமிழர் தரப்பும் தற்போது அவசரப்பட வேண்டிய தேவையில்லை "என்றார்.
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்