சுற்றுலாவில் இலங்கை வந்த வெளிநாட்டவர் - நிகழ்ந்த துயரம்
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவர் நேற்று (21) காலை அஹங்கம தபால் நிலையத்திற்கு அருகில் உள்ள கொன்கிரீட் வடிகாலில் விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அஹங்கம காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தின் போது வெளிநாட்டு பிரஜை குடிபோதையில் இருந்ததாக காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிநாட்டு பிரஜை
அஹங்கமவில் இருந்து காலி நோக்கி ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிநாட்டு பிரஜை அஹங்கம தபால் நிலையத்திற்கு அருகில் உள்ள கொன்கிரீட் வடிகாலில் விழுந்துள்ளார்.
கொன்கிரீட் வடிகாலில் வெளிநாட்டவர் கிடப்பதைக் கண்ட முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மற்றுமொரு நபருடன் இணைந்து அவரை ஹபராது களுகல வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
வெளிநாட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில்
இவர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அஹங்கம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். உயிரிழந்தவர் 31 வயதான gljon asjurias என்ற வெளிநாட்டவர் ஆவார்.
இந்த வெளிநாட்டவரின் சடலம் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அஹங்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
