கனடாவில் படகு விபத்து!! 7 பேர் இறந்த நிலையில் மீட்பு - பலர் மாயம்
கிழக்கு கனடாவின் கடலில் சென்று கொண்டிருந்த ஸ்பானிஷ் கடற்றொழிலாளர்களின் விசைப்படகு மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றையதினம் நியூபவுண்ட்லாண்ட் என்ற இடத்திலிருந்து கிழக்கே 250 கடல் மைல் தொலைவில் படகு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இப்படகில் 24 பேர் சென்றுள்ளனர். அவர்களில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 7 பேர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் 14 பேரை தேடும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.
அங்கு நிலவும் கடுமையான குளிர் வானிலை தேடுதல் பணிக்கு சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.
இருந்தாலும் மீட்புக்குழுவினர் ஹெலிகொப்டர், இராணுவ விமானம், கடலோர காவல்படை கப்பல் மூலம் தொடர்ந்தும் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழிலுக்காகச் சென்ற கடற்றொழிலாளர்களின் விசைப்படகு மூழ்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம், அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 13 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்