தயாசிறியின் நடத்தை தொடர்பில் விசாரணை : சபாநாயகர் அதிரடி நடவடிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் (Dayasiri Jayasekara) நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் (Jagath Wickramaratne) மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (23) நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போது, சபாநாயகர் இதனை நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.
கடந்த மே 20ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு நடைபெற்றபோது, தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை கவனத்தில் கொண்டு இந்த மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டதாக சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
உறுப்பினர்கள் நியமனம்
அதன்படி, குறித்த முறைப்பாடடை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட இந்த குழுவின் தலைவராக, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர (Hemali Weerasekara) நியமிக்கப்பட்டுள்ளார்.
குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath)மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக (Gayantha Karunathilaka )ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
