அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக தடை உத்தரவு: வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தொடர்பில் சபாநாயகர் எடுத்த தீர்மானத்தை வரவேற்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் (Nizam Kariapper) தெரிவித்தார்.
நேற்று (19) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத் திட்டத்தின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒன்பது மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) பாதுகாப்பான முறையில் பூமிக்கு திரும்பியுள்ளார். அவருக்கும் இணை வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
சபாநாயகரின் அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் சபாநாயகர் இன்று (19) நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பை விடுத்தார். இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அறிவிப்பை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இனியாவது தனது செயற்பாட்டை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும்.
நாடாளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக்கொண்டு மக்கள் மத்தியில் வெறுப்பினை தூண்டிவிடக் கூடாது.
இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னர் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டார்கள். மீண்டும் அவ்வாறான நிலை ஏற்படக்கூடாது. ஆகவே அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்