கோட்டாபய தொடர்பில் இறுதி முடிவு எடுக்கத் தயாராகும் சபாநாயகர்
Gotabaya Rajapaksa
Mahinda Yapa Abeywardena
SL Protest
Sri Lankan political crisis
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
சபாநாயகர் கடும் மன அழுத்தத்தில்
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை இதுவரை சபாநாயகருக்கு அனுப்பாத நிலையில் இவ்வாறு சபாநாயகர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா அதிபரின் பதவி விலகல் கடிதம் தொடர்பில் அனைவரும் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிடம் வினவி வருவதால் அவர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது.
கோட்டாபய தொடர்பில் இறுதி முடிவு
இதே நேரம், பதில் அதிபர் ஒருவரை சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளதால், கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை வழங்காவிட்டால், அவர் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர் பதவியில் இருந்து விலகியவராக கருதப்பட்டு அதற்கான சட்ட ஆலோசனைகள் ஆராயப்படும் என சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களை இன்றைய முக்கிய செய்தியில் காண்க,
