சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்! வெளியான அறிவிப்பு
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக முன்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தயாசிறி ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அடுத்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கையொப்பங்களைப் பெறுவது பெரும்பாலும் சாத்தியமாகும் என்று அவர் கூறியுள்ளார்.
காரணம்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ளத் தவறியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படுவதாக தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படாததால், சமீபத்திய நாட்களில் நாடாளுமன்றத்தில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
