சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : ‘இரகசிய டீல்’ ஆரம்பம்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு எதிர்க்கட்சிகளும் ஆளும் தரப்பும் இரகசிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்க மற்றும் எதிர்க்கட்சியின் நான்கு முக்கிய அரசியல்வாதிகளின் வீடுகளில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
தேர்தலின் போது எம்.பி.க்களை தங்கள் பக்கம் அழைப்பதுதான் ஆளுங்கட்சியின் எதிர்க்கட்சிகளின் முக்கிய குறிக்கோள்.
எம்.பிக்கள் எடுத்துள்ள முடிவு
இதற்கிடையில், பல எம்.பி.க்கள் இது தொடர்பாக வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகவும் அதே வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முடிவு தமக்கு சாதகமாக அமையும் பட்சத்தில், எதிர்வரும் தேர்தலில் அதனை பிரசாரக் கருவியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என அரசாங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை ஊக்குவித்துள்ளதாக அறியமுடிகின்றது.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வரும் 20ம் திகதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |