''உடன் பதவி விலக வேண்டும்'' : கோட்டாபயவுக்கு செல்கிறது எழுத்து மூல அறிவிப்பு
Go Home Gota
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
SL Protest
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
கட்சித் தலைவர்களின் தீர்மானங்கள் குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று கூட்டப்பட்டது.
பெரும்பான்மையான கட்சித் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்வரும் நான்கு முக்கிய தீர்மானங்கள் அரச தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
- அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உடனடியாக பதவி விலக வேண்டும்.
- பதில் தலைவரை நியமிக்க இன்னும் 7 நாட்களில் நாடாளுமன்றம் கூட்டப்படும்.
- புதிய பிரதமரின் கீழ் ஒரு இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை நியமித்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அமைத்தல்.
- குறுகிய காலத்திற்குள் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை நியமிக்க வேண்டும்.
அரச தலைவர் மற்றும் பிரதமரின் பதவி விலகலைக் கோரி அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் கொழும்பில் உள்ள அலுவலகம் உட்பட மூன்று அரச கட்டிடங்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதை அடுத்து இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

