ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு அமைச்சு விடுத்த விசேட அறிவித்தல்!

Sri Lanka Economic Crisis SL Protest Ministry of Defense Sri Lanka State of Emergency
By Kanna May 08, 2022 10:16 AM GMT
Report

நாட்டின் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன் கூடிய சூழலில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் நிர்வகிக்க உதவுமாறு நாட்டின் அனைத்து பிரஜைகளிடமும் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளனர்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,

ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமைதியான முறையில் தமது போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தும் இலங்கை மக்களின் ஜனநாயக உரிமையை நாம் அனைவரும் மதிக்கின்றோம் என்பதை குறிப்பிட வேண்டும்.

இருந்த போதிலும், விஷேடமாக நேற்றும் கடந்த சில நாட்களாகவும் அமைதிப் போராட்டமாக நடைபெற்று வந்த போராட்டத்தை மாற்றி மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு அமைச்சு விடுத்த விசேட அறிவித்தல்! | Special Announcement By The Ministry Of Defense

இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் விதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படும் போராட்டங்கள் மற்றும் ஹர்த்தால்களால் பொதுவாக அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம் என்பதே யதார்த்தமாகும்.

நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பொருட்படுத்தாமல் ஆத்திரமூட்டும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடந்துகொள்வதுடன், சட்டம், ஒழுங்கைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், நாட்டின் பொதுச் சட்டத்தை அவமதிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக, சட்டத்தை மதிக்கும் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை கொண்டுச் செல்வவதற்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இந்நிலையில், நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டும், பொது அமைதியைப் பேணுவதற்கும், மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும், சமூக ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் அரச தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவுக்கமைய 2022 மே மாதம் 6 ஆம் திகதி நள்ளிரவு முதல் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கடினமான காலகட்டத்தில் நாட்டிலுள்ள பொறுப்புள்ள பிரஜைகள் என்ற வகையில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் செயல்பட வேண்டும் எனவும், இதுபோன்ற அவசரநிலைகளில் நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டி, அனைவரின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கும் முப்படை மற்றும் பொலிஸாருக்கு உங்களது மேலான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு கேட்டுக் கொள்கின்றது. 

ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015