யாழில் கரையொதுங்கும் பொருட்கள் - அமைச்சரின் உத்தரவு: மக்களுக்கு எச்சரிக்கை

Jaffna Sri Lankan Peoples Sri Lanka Fisherman
By Thulsi Jun 12, 2025 10:44 AM GMT
Report

புதிய இணைப்பு

இன்று (12) நெடுந்தீவு மற்றும் சிலாபம் கடற்கரைகளில் ஒதுங்கியுள்ள Plastic Pellets குறித்து உடனடியாக விரிவான ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த Plastic Pellets கடற்கரையில் ஒதுங்கியிருப்பதன் மூலம் கடல் சூழலியல் மற்றும் கடற்கரையோர சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்கள் குறித்து அமைச்சர் தனது தீவிர கவனத்தைச் செலுத்தியுள்ளார்.

கடல் மாசடைதல், குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மாசடைதல், சுற்றுச்சூழலுக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், இந்த நிலைமை குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நாரா நிறுவன அதிகாரிகளுக்கு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யாழில் கரையொதுங்கும் பொருட்கள் - அமைச்சரின் உத்தரவு: மக்களுக்கு எச்சரிக்கை | Special Announcement For Jaffna Peoples

இந்த Plastic Pellets வந்த வழி, அவற்றின் தாக்கம் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒரு விஞ்ஞான ரீதியான அறிக்கை ஒன்றின் அவசியத்தை அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தின் பல பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப் பொருட்கள் பெருமளவில் கரையொதுங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழில் கரையொதுங்கும் பொருட்கள் - அமைச்சரின் உத்தரவு: மக்களுக்கு எச்சரிக்கை | Special Announcement For Jaffna Peoples

அந்தவகையில் யாழ்ப்பாணத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கி உள்ளன.

குறித்த விடயம் கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட கடற்சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்டு அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டண அதிகரிப்பு: வெடிக்க உள்ள போராட்டம் - அரசுக்கு கடும் எச்சரிக்கை

மின்சாரக் கட்டண அதிகரிப்பு: வெடிக்க உள்ள போராட்டம் - அரசுக்கு கடும் எச்சரிக்கை

பிரதான மூலப்பொருள்

மேற்படி அடையாளம் காணப்பட்ட பொருட்கள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான பிரதான மூலப்பொருள் என்பதுடன் இது சூழலுக்கும் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

யாழில் கரையொதுங்கும் பொருட்கள் - அமைச்சரின் உத்தரவு: மக்களுக்கு எச்சரிக்கை | Special Announcement For Jaffna Peoples

அந்தவகையில் பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்வதுடன் இப்பொருட்களை தொடுதல் மற்றும் எடுத்துச் செல்லுதலை தவிர்க்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவி முகாமையாளருக்கு (வ.கி) அறிக்கையிடப்பட்டுள்ளதுடன் இதனை அப்புறப்படுத்தல் தொடர்பாக உரிய பொறிமுறை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படும் என்பதனை அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

சாவகச்சேரி நகர சபையில் பதவியேற்பதில் கஜேந்திரகுமார் அணிக்கு சிக்கல்

சாவகச்சேரி நகர சபையில் பதவியேற்பதில் கஜேந்திரகுமார் அணிக்கு சிக்கல்

நாட்டில் தீவிரமடையும் மற்றுமொரு நோய்த்தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் தீவிரமடையும் மற்றுமொரு நோய்த்தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023