சகல காவல்நிலையங்களுக்கும் விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு
Sri Lanka Police
Sri Lankan Peoples
Power Cut Today
By Dhilak
நாடு முழுவதும் மின் தடைப்பட்டு காணப்படுவதன் காரணமாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிறப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பின் போது அனைத்து காவல் நிலையங்களுக்கும் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்களின் பாதுகாப்பு தொடர்பில் சகல காவல் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
மின்சார விநியோகம்
கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று (09) நாடளாவிய ரீதியில் மாலை 5 மணியளவில் மின்சார விநியோகம் தடைப்பட்டது.

எவ்வாறாயினும், தற்போது பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |