திடீர் மின்வெட்டு தொடர்பில் விசேட விசாரணை
நாடு முழுவதும் திடீர் மின்வெட்டு எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ள புலனாய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்வெட்டு ஏற்பட்டது என்பது எந்த தரப்பினருக்கும் தெரியாததால், இது திட்டமிட்ட சதியா என்பது குறித்தும் அரசின் கவனம் குவிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் பின்னணியில் இது புதிய மின்சார சட்டத்திற்கு எதிரான திட்டமிட்ட நடவடிக்கையா என்பதை கண்டறிய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காரணம்
எவ்வாறாயினும், கொத்மலை மற்றும் பியகமவில் மின் விநியோக முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின்வெட்டு பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக இந்த அமைப்பை மீளமைக்க கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்கள் எடுக்கும் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் மற்றும் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |