கதிர்காமம் தேவாலயத்திற்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் (Kataragama) தேவாலயத்திற்கு செல்வோருக்கு விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ருஹுணு மகா கதரகம விகாரையை இன்று (13) மாலை 6 மணி முதல் மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ், சிங்கள புத்தாண்டு பிறப்பின் போது பின்பற்றப்படவுள்ள மத கலாசார நிகழ்வுகளை முன்னெடுக்கும் வகையில் குறித்த விகாரை இவ்வாறு மூடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
தலதா மாளிகையில் பாதுகாப்பு
அதன்படி, நாளை (14) மதியம் 1 மணிக்கு பூஜைகளுக்காக விகாரை மீண்டும் திறக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை தலதா மாளிகையில் (Sri Dalada Maligawa) புனித தந்த தாது தரிசனத்திற்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினருக்கு மேலதிகமாக இராணுவத்தினரையும் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தலதா மாளிகையில் புனித தந்த தாது தரிசனம் 18ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள அனைத்து இராணுவப் பிரிவுகளும் இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் இதற்காகப் பயன்படுத்தப்படுமென தெரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
