இல்லத்தரசிகளுக்கு லாப்ஸ் காஸ் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
துறைமுகத்தில் தேங்கியுள்ள எரிவாயு கொள்கலன்களை விடுவிப்பதற்கு கடன் உறுதி பற்று பத்திரங்களை அரசாங்கம் பெற்றுத்தருவதாக இருந்தால் மூன்று வார காலத்திற்குள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியும் என லாப் நிறுவனத்தின் தலைவர் டப்ள்யூ.கே.எச்.வேகபிடிய (WKH Vwkapittiya) தெரிவித்துள்ளார்.
முன்னர் சந்தைக்கு ஒரு நாளைக்கு 40,000 முதல் 50,000 சிலிண்டர்களை வெளியிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நீதிமன்றம், தரநிலைகள் நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியவை எரிவாயு நிரப்புதல் மற்றும் அதன்போது பின்பற்ற வேண்டிய சில பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிந்துரை செய்திருந்தது.
குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது எரிவாயு நிரப்புதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் நாளாந்தம் 10,000 முதல் 15,000 சிலிண்டர்களை விநியோகித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
