எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவித்தல்!!
Fuel Price In Sri Lanka
Ceylon Petroleum Corporation
Sri Lanka Economic Crisis
Sri Lanka Cabinet
Kanchana Wijesekera
By Kanna
தரமற்ற எரிபொருட்களின் தரம் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் சந்தேகங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) தெரிவிக்க முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மண்ணெண்ணெய்யுடன் டீசலை கலப்பதாக முறைப்பாடுகள் பல கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பான முறைப்பாடுகளை CPC அவசர தொலைபேசி இலக்கமான 0115 455 130 அல்லது 0115 234 234 ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவ் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளைக் கலந்திருந்தால் அவற்றின் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிசி தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி