தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவை: முன்பதிவு குறித்து முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பிலிருந்து தத்தமது சொந்த இடங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு வசதியளிக்கும் வகையில், இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) இணைந்து சிறப்புப் பேருந்து சேவைகளைத் தொடங்கியுள்ளன.
இந்த ஆண்டு தீபாவளி தினமானது நவம்பர் 8 அன்று கொண்டாடப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நவம்பர் 6 ஆம் திகதியிலிருந்தே ஏராளமான மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பயணிகள் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் மற்றும் பெஸ்தியன் மாவத்தாவில் உள்ள தனியார் பேருந்து முனையத்தில் கூடுவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
வேகமான முன்பதிவு
இதன்படி நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் கொழும்பிலிருந்து ஹட்டன், தலவக்கலை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் பெருமளவிலான இருக்கைகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் இலங்கை போக்குவரத்துச் சபையின் இருக்கை முன்பதிவு சேவை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், யாழ்ப்பாணம், வவுனியா, பதுளை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை போன்ற இடங்களுக்குச் செல்லும் பேருந்துகளிலும் இருக்கைகள் வேகமாக முன்பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, பண்டிகைக் காலங்களில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்கவும், வசதியான பயணத்தை உறுதி செய்யவும், பயணிகள் https://sltb.eseat.lk/ என்ற இணையதளம் மூலம் தங்களது இருக்கைகளை முன்கூட்டியே முன்பதிவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர் .
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |