நாட்டில் 32 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் - கல்வி அமைச்சரின் விசேட நடவடிக்கை
தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
சேவையில் இருந்து விலகிய ஆசிரியர்களின் ஓய்வு காரணமாக உருவாக்கப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாண சபைகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில் குறித்த அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்படும் என அமைச்சர் இன்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப பாடங்களுக்கு 5,400 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க மாகாண சபைகளுக்கு ஏற்கனவே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது சுமார் 32,000 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு பல்வேறு தடைகள் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஆசிரியர் நியமன திட்டம்
இதனிடையே, அரச பாடசாலைகளுக்குான 8,000 ஆசிரியர்களை விரைவில் நியமிக்கும் திட்டத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் நேற்று அறிவித்துள்ளார்.
இந்த நியமனங்களில் 5,500 பட்டதாரி ஆசிரியர்களும், இரண்டாம் மொழி கற்பித்தலில் நிபுணத்துவம் பெற்ற 2,500 ஆசிரியர்களும் அடங்குவர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.