26 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனம் - அரசாங்கம் வெளியிட்ட தகவல்
Ministry of Education
A D Susil Premajayantha
Sri Lanka
By Beulah
சிறிலங்காவில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதற்காக விரைவில் 26 ஆயிரம் ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கும் வேலைத்திட்டத்தை எதிர்வரும் வாரங்களில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது.
கிரமமான வேலைத்திட்டம்
வடமேல் மாகாணத்தில் குறித்த வேலைத்திட்டம் முதலில் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசுகையில், ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு கிரமமான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
