இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறை
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Dengue Prevalence in Sri Lanka
By Sathangani
இன்று (07) முதல் விசேட டெங்கு தடுப்பு வாரமொன்றை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட 70 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கி இந்த டெங்கு தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வேலைத்திட்டம் தொடர்பில் இன்று மக்களுக்கு அறிவிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய தலைவர் நியமனம்
இதேவேளை, இலங்கை மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டிற்கான பொருத்தமான நியமனம் இலங்கை மருத்துவ சங்கத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதுவருடத்தின் நான்கு நாட்களில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் : முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா..!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முதலாம் ஆண்டு திவச அழைப்பிதழ்