ரணில் வெளியிட்ட விசேட வர்த்தமானி

Vanan
in பொருளாதாரம்Report this article
கொழும்பு துறைமுக நகரத்தில் வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் (requirement) முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகளே வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச முதலீடு
ஒரு முதலீட்டாளர் ஒரு சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகத்தை நடத்த குறைந்தபட்சம் 05 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய வேண்டும்.
குறித்த முதலீட்டாளருக்கு சுங்க வரியில்லா வர்த்தக நடவடிக்கைகளில் உலகளாவிய அனுபவமும் இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்க வரியில்லா வணிக வளாக வர்த்தகத்தை நடத்துவதற்கு, ஒரு முதலீட்டாடளர் குறைந்தபட்சம் 07 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
