ரணில் வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் போன்றவற்றில் நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, பராமரிப்பு, உணவு சிகிச்சை போன்றவற்றிற்கு தேவையான அனைத்து சேவைகள், வேலை அல்லது அவசியமான உழைப்பு அல்லது தேவையான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக அறிவித்து அரசால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது .
அதிபர் ரணிலின் உத்தரவின் பேரில் இது வெளியிடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் நாளையும் தொடரும் என சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று அறிவித்துள்ளன.
வேலைநிறுத்தப் போராட்டம்
மருத்துவர்களுக்கு வழங்கப்படும் இடையூறு, இருப்பு மற்றும் போக்குவரத்து (டிஏடி) கொடுப்பனவை சுகாதாரப் பணியாளர்களுக்கும் வழங்கக் கோரி இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கை
இந்த விடயம் தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததையடுத்து, சுகாதார தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |