வருங்கால மனைவியுடன் சத்திரசிகிச்சை கூடத்தில் புகைப்படம் : மருத்துவருக்கு ஏற்பட்ட நிலை
தனது வருங்கால மனைவியுடன் சத்திரசிகிச்சை கூடத்தில் புகைப்படம் எடுத்த மருத்துவர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள பரமசாகர் அரசு மருத்துவமனையில் அபிஷேக் (29) என்ற மருத்துவரே பணி நீக்கம் செய்யப்பட்டவராவார்.
சமுக வலைத்தளங்களில் வைரல்
இவர் எடுத்த புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து மருத்துவரின் செயற்பாட்டிற்கு சமூக செயற்பாட்டாளர்களும், மருத்துவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அந்த மருத்துவரை பணியில் இருந்து நீக்கி, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாககர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ‘‘அரசுமருத்துவமனைகள் மிக உன்னதமான நோக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைதன் சொந்த தேவைக்கு பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
மருத்துவமனையின் மாண்பை குலைக்கும் வகையில்
மருத்துவர் அபிஷேக் மருத்துவமனையின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்டது உறுதியாகியுள்ளது. எனவே அவரை உடனடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளேன். மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு பரமசாகர் அரசு மருத்துவமனையின் பணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது'' என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |