அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு விசேட விடுமுறை
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காகவே குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பதுளை (Badulla) பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படுவதாக ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் காமினி மகிந்தபால ஜோபியஸ் (Gamini Mahintapala Jobius) தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு விடுமுறை
இதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் நிலையங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட பதுளை மத்திய மகா வித்தியாலயம் மற்றும் பதுளை விசாகா பெண்கள் உயர்தரப் பாடசாலை ஆகியன இம்மாதம் 13ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை விகாரமஹாதேவி மகளிர் உயர்தரப் பாடசாலை மற்றும் பதுளை ஊவா உயர்தரப் பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு 19 மற்றும் 20 திகதி விடுமுறை வழங்கப்படுவதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களாக தெரிவு செய்யப்பட்ட மாவட்டத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |