மர்ம முடிச்சுக்களுடன் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் - களமிறங்கிய சிறப்பு விசாரணை குழு
தனது இல்லத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்த முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து மேற்கு தெற்கு குற்றப்பிரிவு சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண தெற்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் சமந்த விஜேசேகரவை விசாரணையை மேற்பார்வையிடுமாறு காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டினால் மரணம் ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அது தற்கொலையா அல்லது தற்செயலாக வெடித்ததா என்பதை புலனாய்வாளர்கள் இன்னும் கண்டறியவில்லை.
பிரேதப் பரிசோதனை
வரவிருக்கும் தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளிலிருந்து இதுபற்றித் தெளிவு கிடைக்கும் என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்ததாக தென்னிலங்கை ஊடகம் தெரிவித்துள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி, விக்ரமரத்னவின் மார்பில் குண்டு பாய்ந்ததில், அது அவரது முதுகு வழியாக வெளியேறியது. சம்பந்தப்பட்ட துப்பாக்கி, அவரது பாதுகாப்புப் பிரிவில் நியமிக்கப்பட்டிருந்த சார்ஜென்ட்டுக்குச் சொந்தமானது.
உடற் பயிற்சிக்குக் கிளம்புவதற்கு முன்பு, சி.டி. விக்ரமரத்ன அந்தத் துப்பாக்கியைச் சோதிக்கக் கோரியதாக அந்த சார்ஜென்ட் புலனாய்வாளர்களிடம் கூறினார். சில கணங்களுக்குப் பிறகு, தண்ணீர் போத்தல்களை எடுப்பதற்காக அந்த சார்ஜென்ட் உள்ளே சென்றபோது, துப்பாக்கிச் சத்தம் கேட்டது.
இறுதிச் சடங்கு
அப்போது, விக்கிரமரத்னவின் மனைவியும் இளம் மகனும் வீட்டிற்குள் இருந்தனர். அவர்கள் வெளியே விரைந்து வந்து பார்த்தபோது, அவர் சரிந்து விழுந்து கிடப்பதையும், துப்பாக்கி அருகில் கிடப்பதையும் கண்டனர்.

மறைந்த முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்கு இன்று (20) முழு மரியாதையுடனும் சம்பிரதாய மரியாதையுடனும் நடைபெறும் என காவல்துறை அறிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்