வவுனியாவில் வர்த்தக நிலையங்களில் விசேட சோதனை நடவடிக்கை
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியா நகரம் முழுவதும் சுகாதார நிலையை உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் நகரின் முக்கிய வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் இன்று (13) திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.
இச்சோதனை நடவடிக்கையின் போது உணவு பாதுகாப்பு, சுத்தம், காலாவதியான பொருட்கள் மற்றும் சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டிருந்தது.
சட்ட நடவடிக்கைகள்
அத்துடன் சுகாதார விதிமுறைகளை மீறிய சில வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதுடன், தேவையான இடங்களில் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக இத்தகைய சோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளதுடன், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |