டயானா கமகே தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே (Diana Gamage) மீது முன்வைக்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் அங்கத்துவம் தொடர்பான குற்றச்சாட்டினை விசாரித்து உண்மைகளை தெரிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவானது குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க (Manjula Ratnayake) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கம்பகா (Gampaha) , தொம்பே மாகம்பிட்டிய (தெற்கு) பகுதியைச் சேர்ந்த வை.ஏ. சமன் நிஷாந்த என்ற நபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டினை நேற்று பரிசீலித்த போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
இந்நிலையில், நாட்டின் பிரஜை அல்லாத டயானா கமகேவின் பெயரை இணைத்து கட்சியின் செயலாளர் தவறிழைத்துள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாட்டாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், நீதிமன்றில் முன்வைத்த கருத்துக்களை பரிசீலித்த நீதவான், சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை ஆரம்பித்து உண்மைகளை நீதிமன்றில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |