இலங்கையில் தரமற்ற மருந்து பாவனை - விசேட விசாரணைகள் ஆரம்பம்
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By Vanan
இலங்கையில் தரமற்ற மருந்துகளை பயன்படுத்தியமை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் முந்தைய விசாரணைகளில் தரமற்ற மற்றும் பதிவு செய்யப்படாத மருந்துகளின் பயன்பாடு குறித்த குறிப்பிடத்தக்க தகவல்கள் வெளிக்கொணரப்பட்டதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
மருந்துகள் கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பான கணினி அமைப்பு பற்றிய தனி விசாரணை தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது.
இது தொடர்பான அறிக்கையை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க கணக்காய்வாளர் நாயகம் எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களை முக்கிய செய்திகளின் தொகுப்பில் காண்க,
,
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி