கோட்டாபய தலைமையில் ஆளுங்கட்சியினரின் அவசரக் கூட்டம்!
sri lanka
politics
meeting
Gotabaya Rajapaksa
By Thavathevan
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆளுங்கட்சியின் விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
இன்று மாலை ஆறு மணியளவில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி உள்ளிட்ட பொருளாதார விடயங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் விசேட கூட்டத்திற்கு முன்னதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று காலை இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி