கண்காணிக்கப்படும் சமூக வலைத்தளங்கள் - பாதுகாப்பு அமைச்சு விளக்கம்!
Facebook
Twitter
WhatsApp
Sri Lankan Peoples
Ministry of Defense Sri Lanka
By Pakirathan
சமூக ஊடகங்களை கண்காணிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்திகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
எவ்விதமான கண்காணிப்பு செயல்பாடுகளும் இடம்பெறவில்லை எனவும், சமூக வலைத்தளங்களில் இது தொடர்பில் பரவிவரும் செய்திகள் முற்றிலும் தவறானவை எனவும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிக்கும் செயற்பாடுகள்
அனைத்து தொலைபேசி உரையாடல்களும் பதிவுசெய்யப்படுதல், தொலைபேசி அழைப்புகளை சேமித்தல், வட்ஸ் அப்(whats app), முகப்புத்தகம்(face book) மற்றும் டுவிட்டர்(twitter) ஆகியவற்றை கண்காணிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் அண்மைய நாட்களில் செய்திகள் பரவி வருகின்றன.
இது தொடர்பிலே பாதுகாப்பு அமைச்சு தனது விளக்கத்தை அளித்துள்ளது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி