கட்டுநாயக்க விமான நிலைய வாகன தரிப்பு : வெளியான விசேட அறிவிப்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வாகனங்களை நிறுத்துதல் மற்றும் கையாளுதல் தொடர்பாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நெரிசலை தவிர்க்கும் வகையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வெளியே சாரதி இன்றி வாகனங்களை எந்த நேரத்திலும் நிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பொறியியலாளர் அதுல கல்கட்டிய இது தொடர்பான அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
விமானப் பயணிகளை ஏற்றிச் செல்ல வரும் அனைத்து வாகனங்களும்
விமானப் பயணிகளை ஏற்றிச் செல்ல வரும் அனைத்து வாகனங்களும் அந்தந்த வாகன நிறுத்துமிடத்திலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே விமான நிலைய வருகை முனையத்திற்கு வர வேண்டும்.
விமான நிலைய வளாகத்தில் தேவையில்லாமல் 30 நிமிடங்களுக்கு மேல் வாகனங்களை ஓட்டி, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி, உத்தரவை மீறி செயற்படும் வாகனங்கள், விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லும்போது சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வாகன நெரிசலை தவிர்க்க
இதன் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக விமானப் பயணிகளுக்கு இலகுவான மற்றும் ஒழுங்கான சேவை கிடைக்கப்பெறுவதுடன், விமான நிலையத்திற்குள் சட்டவிரோதமான மற்றும் தேவையற்ற நபர்கள் மற்றும் வாகனங்கள் பிரவேசிப்பதைத் தடுப்பதன் மூலம் விமான நிலையத்தின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |