கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படை ஆயுதம் தேடி அகழ்வு
Kilinochchi
By Vanan
கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இன்று(21) அகழ்வுகளை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அப்பகுதியில் கடந்த 18.08.2023 ஆம் திகதி கிணறு சுத்தம் செய்யும் வேளையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை

இது தொடர்பாக இராணுவத்தினருக்கும் காவல்துறையினருக்கும் தெரியப்படுத்தி நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீடக்கப்பட்டதை அடுத்து காவல்துறை விசேட அதிரடிப்படையினர் அகழ்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.