விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி திருமலையில் அகழ்வுப் பணி
trinco
police
research
By Vanan
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவ நகர் பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் அகழ்வுப்பணியில் ஈடுபட்டனர்.
தேவநகர்-உதயபுரி மேல் வீதியிலுள்ள தனியார் காணியொன்றில் கைக்குண்டொன்று நேற்று(24) மாலை கண்டெடுக்கப்பட்டது.
இதனை அடுத்து பொலிஸார் திருகோணமலை நீதிமன்றத்திற்கு இவ்விடயம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்து குறித்த அகழ்வுப்பணியில் ஈடுபட்டனர்.
வீட்டு உரிமையாளரின் சகோதரரொருவர் ஏற்கனவே விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.