இலங்கைக்கு இலட்சக்கணக்கில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்
ஜனவரி மாத தொடக்கம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சம் (1.1 மில்லியன்) எல்லையைத் தாண்டியுள்ளது.
இந்த காலப்பகுதியில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர்.
இந்த விடயம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்தே வருகை
அதன்படி, ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூன் 21ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,104,354 ஆகப் பதிவாகியுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜூன் 01ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் 82,332 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் இதுவரை வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் அதிகமானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர் என்பதுடன், அந்த எண்ணிக்கை 31,158 ஆகும்.
அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் வருகை
இரண்டாவது அதி கூடிய சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) வருகை தந்துள்ளதோடு, அந்த எண்ணிக்கை 6,658 ஆகப் பதிவாகியுள்ளது.

மூன்றாவது இடத்தில் சீனாவிலிருந்து 5,178 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 104,751 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 76,963 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், இவ்வருடத்தில் மாதமொன்றில் பதிவான அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் வருகை பெப்ரவரி மாதத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 279,328 ஆகக் குறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |