இலங்கை தொழிலாளர்களின் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் மீது இணையவழி தாக்குதல்! அரசாங்கம் விளக்கம்
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய பணம் இணையவழித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள வாதங்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற பொய்ப் பிரசாரங்களைச் செய்வதிலிருந்து எதிர்க்கட்சிகள் விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலைமை குறித்து மேலும் விளக்கிய பிரதி அமைச்சர்,
இஸ்ரேலிய அரசாங்கம்
“இலங்கை வங்கியும் 'குளோபல் ரெமிட்' என்ற சர்வதேச அமைப்பும் இணைந்து செயல்படுத்தும் ஒரு திட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட பணப் பரிமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

சம்பந்தப்பட்ட குளோபல் ரெமிட் நிறுவனத்திற்கு எதிராக இஸ்ரேலிய அரசாங்கம் தற்போது நடத்தி வரும் ஒரு விசாரணையினால் தற்போதைய பிரச்சினை உருவாகியுள்ளது.
இந்த விசாரணையின் விளைவாக, சுமார் 5,100 இலங்கைத் தொழிலாளர்கள் தங்களது பணத்தைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
இருப்பினும், இது இலங்கைக்கு மட்டும் உரியதல்ல; அங்கு பணிபுரியும் பிற வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உட்பட, மொத்தம் சுமார் 11,400 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
6.9 மில்லியன் அமெரிக்க டொலர்
தற்போது, 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. மேலும் குளோபல் ரெமிட் தனது தரப்பை இஸ்ரேலிய நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது.
உரிய தொகையைச் செலுத்துவதற்குத் தாங்களே பொறுப்பு என அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதால், இப்பிரச்சனைக்கு மிக விரைவில் ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என அரசு எதிர்பார்க்கிறது.
அரசு ஏற்கனவே தூதரக மற்றும் நிறுவன ரீதியான மட்டங்களில் தலையிட்டு, இது தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதால், அனைத்து ஊடக நிறுவனங்களும் பொதுமக்களுக்குச் சரியான தகவல்களை மட்டுமே தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என துணை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 5 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்