பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறைகைதிகளுக்கு விசேட சலுகை
Sri Lanka Police
Sri Lanka
By Shalini Balachandran
சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை திறந்த வெளியில் பார்வையிட அவர்களது உறவினர்களுக்கு விசேட வாய்ப்பு வழங்க்கப்படவுள்ளது.
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசேட வாய்ப்பு
இதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இந்த விசேட வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தினங்களில் கைதிகளின் உறவினர்கள் ஒரு கைதிக்கு தேவையான உணவுப்பொதிகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய ஒரு பொதியை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய உறவினர்கள் கைதிகளை பார்வையிட நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி