இன்று கூடவுள்ள விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்! வெளியான அறிவிப்பு
Sri Lanka Parliament
Sri Lankan Peoples
President of Sri lanka
By Kiruththikan
கட்சித் தலைவர்கள் கூட்டம்
சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கூட்டம் குறித்து அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு உறுப்பினர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் பதவி தொடர்பில் இறுதி இணக்கப்பாடு
பிரதமர் பதவி தொடர்பில் கட்சித் தலைவர்கள் செய்துகொண்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பிரதமராக வரவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்பட உள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
