அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவிகளுக்கான விசேட திட்டம்
நாடு முழுவதும் உள்ள பாடசாலை மாணவிகளுக்கு ''சானிட்டரி நப்கின்கள்'' வழங்கும் தேசிய திட்டம் “2026 முதல் நீடிக்கப்பட்டு விரிவுபடுத்தப்படும்” என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் மூலம் 6 ஆம் வகுப்புக்கு மேல் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைவார்கள் என்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார்.
கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற மாணவிகளின் சுகாதாரம் குறித்த கலந்துரையாடலின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
1.44 பில்லியன்
கிராமப்புற, மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவிகளை இலக்காகக் கொண்டு 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், இப்போது நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்காக அரசாங்கம் ரூ. 1.44 பில்லியனை ஒதுக்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள மாணவிகள் “சானிட்டரி நாப்கின்களை” வாங்குவதற்காக ரூ. 1,440 மதிப்புள்ள வருடாந்திர வவுச்சரைப் பெறுவார்கள், இது மாகாண கல்வி அலுவலகங்கள் மூலம் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |