உக்ரைனில் உள்ள இலங்கை இளைஞன் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை (காணொலி)
ukraine
srilankan
live
request
By Sumithiran
ரஷ்ய - உக்ரைன் மோதலை அடுத்து உக்ரைனில் வசிக்கும் இலங்கை இளைஞர் ஒருவர் தெரிவித்த கருத்து ஒன்றின் காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
உயர்கல்விக்காக உக்ரைன் சென்றுள்ள தக்ஷித் விஜேசேகர என்ற இலங்கை இளைஞரே இந்த காணொலியை வெளியிட்டுள்ளார்.
தன்னையும் தனது குழுவினரையும் உக்ரைனில் உள்ள லிவிவ் நகருக்கு அழைத்துச் சென்று போலந்து எல்லையைக் கடந்து இலங்கைக்கு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார். மறு அறிவித்தல் வரை தானும் தனது குழுவினரும் தூதரகத்தில் இருப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்