சட்டவிரோத நெல் கொள்வனவு : வியாபாரிகளின் தராசுகள் பறிமுதல்

Batticaloa Ministry of Agriculture
By Kathirpriya Feb 08, 2024 01:24 PM GMT
Report

நெல் கொள்வனவில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பைச் சேர்ந்த 8 வியாபாரிகளின் தராசுகளை கைப்பற்றி அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் (07) திடீரென இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது மட்டக்களப்பில் விவசாயிகளிடம் சட்டவிரோத தராசுகள் மூலம் நெல் கொள்வனவில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளின் தராசுகள் சோதனை செய்யப்பட்டது.

சட்டவிரேத தராசு 

இதன்போது சட்டவிரேத தராசு மூலம் மோசடியாக நெல் கொள்வனவு செய்துவந்த 8 வியாபாரிகளின் தராசுகள் கைப்பற்றப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அளவீட்டு திணைக்களத்தின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான பணிப்பாளர் வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

சட்டவிரோத நெல் கொள்வனவு : வியாபாரிகளின் தராசுகள் பறிமுதல் | Special Ride In Rice Traders Balance Scale

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வேளாண்மை அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்துவரும் வெளிமாவட்ட வியாபாரிகள் தராசுகள் மூலம் மோசடி செய்து விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்துவருவதாக விவசாயிகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி முரளிதரனின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்த நிலையில் வயல்பகுதிகளில் நெல் கொள்வனவில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளின் தராசுகளை பரிசோதனை செய்யுமாறு அரசாங்க அதிபர் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

சுற்றிவளைப்பு நடவடிக்கை

இதனையடுத்து மாவட்ட பணிப்பாளர் விக்கினேஸ்வரன் தலைமையில் செங்கலடி பிரதேசத்திலுள்ள வயல் பகுதிகளில் லொறிகளில் நெல் கொள்வனவு செய்துவரும் வியாபரிகளைத் தேடி முற்றுகையிட்டு அவர்களின் தராசுகளை பரிசோதனை செய்தனர்.

சட்டவிரோத நெல் கொள்வனவு : வியாபாரிகளின் தராசுகள் பறிமுதல் | Special Ride In Rice Traders Balance Scale

இதில் அரச அனுமதியற்ற 5 தராசுகளும் அளவையில் மோசடி செய்யப்பட்ட 3 தராசுகளும், உள்ளடங்கலாக 8 தராசுகளைக் கைப்பற்றியதுடன் 8 வியாபரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்படட தராசுகளையும் உத்தியோகத்தர் குழு எடுத்துச் சென்றுள்ளது.

இந்த முற்றுகையில் கைப்பற்றி கொண்டுவரப்பட்ட தராசுகளை அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்திற்கு அரசாங்க அதிபர் நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் தொடர்ந்தும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

சட்டவிரோத மாணிக்கக்கல் விற்பனை : சோதனையில் சிக்கிய பிக்கு

சட்டவிரோத மாணிக்கக்கல் விற்பனை : சோதனையில் சிக்கிய பிக்கு


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026