இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தி! நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு
police
colombo
ajith rohana
By Shalini
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 02 வருடங்கள் பூர்த்தியடைவதையிட்டு இன்று நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட தேவாராதனைகள் நடைபெறவுள்ளன.
இவற்றுக்கு ஆகக்கூடிய பாதுகாப்பை வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். இதுதொடர்பாக அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் தொகுதி, பொலிஸ் பிரிவின் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை பொலிஸாருக்கு மேலதிகமாக படற்படை மற்றும் இராணுவமும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்